அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்; தொண்டர்கள் குவிந்தனர்*
தூத்துக்குடி.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நேற்று விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான எஸ்.பி.சண்முநாதன், அதற்கான விண்ணப்பங்களை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அதிமுக அமைப்பு செயலாளர் சி.த.செல்லபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மாநகராட்சி உறுப்பினர் மற்றும் மேயருக்கான விண்ணப்ப படிவங்களை பெற அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் ஏராளமானோர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திரண்டு வந்திருந்ததால் அப்பகுதி பரபரப்பாக இருந்தது.
தூத்துக்குடியில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்; தொண்டர்கள் குவிந்தனர்