கோவை மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில்



கோவை மாவட்ட  கழகம் திமுக கட்சி அலுவலகத்தில்

கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார்.

 

அப்போது அவர் கூறுகையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 100 சதவீத வரி உயர்வை அமுல்படுத்தினர். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். 

 

மேலும், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் வினியோக உரிமையை பிரான்ஸ் நாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதை கண்டித்தும், சுகாதரமற்ற கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.

 

 இந்நிலையில், சூயஸ் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும், 100 சதவீத சொத்து வரி உயர்வை இரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும். 20 ந்தேதி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார். 

 

இந்த பேட்டியின்போது, திமுக சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, மெட்டல் எம்.மணி , ச.குப்புசாமி, இரா.கா.குமரேசன், மு.கா.உமாமகேஸ்வரி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் மெட்டல் டி.எஸ்.பி  கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் மு.ம.ச.முருகன், மா.மகுடபதி, சி.வி.தீபா, சி.டி.டி.ராஜராஜேஸ்வரி பாபு, தீர்மானக்குழு உறுப்பினர் மு.இரா.செல்வராஜ், பகுதிக்கழகச் செயலாளர்கள் கோவை லோகு, எஸ்.எம்.சாமி, ஆர்.எம்.சேதுராமன், வெ.கோவிந்தராஜ், வ.ம.சண்முகசுந்தரம், மார்க்கெட் எம்.மனோகரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image