நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சித்தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட உள்ளர்வர்களுக்கு விருப்ப மனு வழங்கும் நிகழ்வினை விருதுநகர் மாவட்ட கழக செயலாளரும்,பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி , விருதுநகரில் துவக்கி வைத்தார். நரிக்குடி
ஒன்றிய இணைச்செயலாளர் இந்திராணிசரவணன்,
ஆணைக்குளம் வார்டு கவுன்சிலருக்கு போட்டியிட விருப்ப மனுவினை, தேர்தல் பணிக்குழுவினர்களான மாநில அம்மா பேரவை சேதுராமானுஜம், அண்ணா தொழிற்சங்கம் சங்கரலிங்கம் , சிறுபான்மைப்பிரிவு ஹெச்.சித்திக் அவர்களிடம் வழங்கினார் .நிகழ்வில், விருதுநகர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் அம்மன்பட்டிகௌதம்ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.