சேலம்
லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில், உள்ளாட்சி தேர்தலுக்கான மாநில அளவிலான ஆலோசனைக்கூட்டம் சேலம் ரிஷி மஹாலில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் ச.வித்தியாதரன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் இரா.செல்வபாரதி முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர்கள் சந்திரசேகரன், நம்பியார், பாராளுமன்ற குழுத் தலைவர் ஜனனி மகாலிங்கம், இளைஞரணி தலைவர் காசிமாறன், மகளிரணி தலைவி வசந்தி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.