ரஷ்ய நகரமான நோவோவொரோனேஜ்-ல், இரண்டாம் அணு மின் நிலையத்தில் வர்த்தக மின் உற்பத்தி தொடக்கம்

சென்னை, நவம்பர் 7


 


ரஷ்ய நாட்டு நகரங்களில் ஒன்றான நோவோவொரோனேஜ்-ல் (Novovoronezh) உள்ள இரண்டாவது அணு மின் உற்பத்தி நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள ரோசனெர்கோடோம் (Rosenergoatom) எனக் குறிப்பிடப்படும், அதி நவீன அணு உலையில் வர்த்தக ரீதியிலான மின் உற்பத்தி  தொடங்கியுள்ளது. ரஷ்ய நாட்டு அணு மின் உற்பத்திக் கழகமான ரோஸாட்டம் (ROSATOM), கட்டமைத்த 3-ஆம் தலைமுறையின் முன்னோடி அணு உலை இது என்பது குறிப்பிடத்தக்கது.  


வி.வி.இ.ஆர்.-1200 (VVER-1200) எனக் குறிப்பிடப்படும், இந்த அணு உலையின் மூலம் மின் உற்பத்தி  தொடங்க திட்டமிட்ட 30 நாட்களுக்கு முன்னதாக இது வர்த்தக ரீதியில் செயல்படத் தொடங்கியுள்ளது. ரஷ்ய நாட்டு அணுசக்தித் துறை கட்டுப்பாட்டு அமைப்பானரொஸ்டேசனடஸ்வ்ரின் (Rostechnadzor) ஒப்புதல் பெற்று தொடங்கப்பட்டுள்ள இந்த மின் உற்பத்தி , ரஷ்ய நாட்டின் அணு மின் உற்பத்தி வரலாற்றில் மற்றும் ஒரு முக்கிய நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தத் தொடக்க விழாவில் பங்கேற்ற ரோஸாட்டம் நிறுவனத்தின் முதல் துணை தலைமை இயக்குனரும், ரோஸாட்டம் நிறுவனத்தின் தொழில்நுட்பக் கிளை நிறுவனமான ஏ.எஸ்.இ. குழும நிறுவனங்களின் தலைவருமான திரு. அலெக்ஸாண்டர் லாக்ஷின் (Alexander Lokshin) பேசுகையில், “இந்த திட்ட அமலாக்கத்தில் நூற்றுக்கணக்கான அணு ஆய்வாளர்கள் பங்களித்துள்ளனர். இதன்மூலம் ரஷ்ய நாட்டுக்கு புதிதாக, வலுவான ஒரு மின் உற்பத்தி  நிலையம் கிடைத்துள்ளது. இந்த இரட்டை மின் உற்பத்தி  வடிவமைப்பை மற்ற எங்களது வெளிநாட்டு விருந்தினர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் மாதிரியாக காட்டுவதற்கு தற்போது இயலும்” எனவும் தெரிவித்தார்.


அவர் மேலும் பேசுகையில், “கடந்த கால அனுபவத்தால், அணு மின் நிலையம் மற்றும் அணு உலைகள் கட்டத் தேவைப்படும் கட்டுமானப் பணி, உற்பத்தி கட்டமைப்பு, தகுந்த சந்தையை அறிந்து, மூலப் பொருட்களை வாங்குதல், வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து சப்ளை செய்தல், அனைத்துக்கும் தேவையான நிதியாதாரங்களை உருவாக்குதல் போன்ற பணிகளோடு, இவற்றை உரிய நேரத்தில் திறம்பட முடிப்பதிலும் தேர்ச்சி பெற்றுள்ளோம். இந்தத் திறன் தற்கால அதி நவீன சந்தையின் தேவைகளை எதிர்கொள்ளவும், அணு மின் நிலையங்கள் அமைப்பதில் உள்ள பெரும் சவால்களைச் சந்திப்பதிலும் பேருதவியாக உள்ளன” எனவும் தெரிவித்தார்.


வி.வி.இ.ஆர்.-1200 மாடல் அணு உலை என்பது ரோஸாட்டம் நிறுவனம் தயாரிக்கும் மூன்றாம் தலைமுறை அணு உலை வரிசையில் தனித்துவம் வாய்ந்தது. பி.டபள்யூ.ஆர் (PWR) வகை எனக் குறிப்பிடப்படும் இது, மூன்றாம் தலைமுறை அணு மின் நிலைய தொடர் வரிசையில் ஒன்றாகக் கட்டப்படுகிறது. ரஷ்யாவின்நோவோவொரோனேஜ் நகரத்தில் இரண்டாவது அலகு அணுமின் உற்பத்தி நிலையமாக வடிவம் பெற்று வரும் இது, மேற்கண்ட வரிசையில் கட்டப்படும் மூன்றாவது அணு மின் நிலையம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வரிசையின் முதல் அணு உலை, இதே நகரத்தின் முதல் அலகு மின்நிலையத்தில் 2016-இல் நிறுவப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது. இது தவிர லெனின்கிரேட் நகரத்தில் அமைந்துள்ள இரண்டாம் அலகு அணு மின் உற்பத்தி நிலையத்தில் பி.டபள்யூ.ஆர். வகையின் இரண்டாவது அணு உலை, 2017-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அது கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று அந்நாட்டு மின் பகிர்மான வலையில் இணைக்கப்பட்டதால், ஏற்கனவே 250 கோடி கிலோவாட் மின்சார உற்பத்தி செய்து வழங்கப்பட்டுள்ளது.


நோவோவொரோனேஜ் நகரத்தில் அமையும் இந்த அணு உலை உற்பத்தி மத்திய ரஷ்யாவின் மின் பகிர்மான வலையில் இணைக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் மொத்த மின் கடத்தும் திறனில் 27 சதவீத அளவு, இனி அணு மின்சாரம்தான் என்ற அளவு மாற்றம் ஏற்படும். இதனால், இப்பகுதியின் காற்றுவெளியில், மாசுவை அதிகரிக்கும் பசுமை வாயுக்களின் அளவு சராசரியாக,  40 லட்சம் டன் அளவுக்கு குறைகிறது. அதோடு, இந்த பகுதியின் பொருளாதார மேம்பாட்டுக்கும் இந்த மின் உற்பத்தி நிலையம் மிகப் பெரிய அளவு உதவுகிறது.


புதுமைகள் நிறைந்த மூன்றாம் தலைமுறை மின் உற்பத்தி நிலையத்தில்  தற்போது வி.வி.இ.ஆர்.-1200 அணு உலையும் பொருத்தப்பட்டுள்ளதால், கடந்த தலைமுறை மின் உற்பத்தி நிலையம் (வி.வி.இ.ஆர்.-1000) அமைக்கப்படுவதைவிட ஏராளமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு பலன்கள் உள்ளன. உதாரணமாக  மூன்றாம் தலைமுறை சாதனங்கள் 20 சதவீதம் கூடுதல் சக்தி கொண்டவை. கடந்த தலைமுறை பொருட்களை விட, 30 முதல் 40 சதவீதம் குறைந்த எண்ணிக்கை ஆட்களைக் கொண்டே இயக்கலாம். இயந்திரங்களின் வாழ்நாளைப் பொறுத்தவரை, இரட்டிப்பு பலன் உண்டு. அதாவது 60 ஆண்டு என்ற அதிக ஆயுள் கிடைப்பதோடு, அதை மேலும் 20 ஆண்டுகள் நீட்டிக்கும் வாய்ப்பும் உண்டு.


பின்லாந்து, ஹங்கேரி, சீனா, வங்கதேசம், மற்றும் பெலாரஸ் போன்ற பல நாடுகள், இந்த நவீன தொழில்நுட்பத்தை ஏற்க முன்வந்துள்ளன. ரோஸாட்டம் நிறுவனத்தின் தற்போதைய பன்னாட்டு சந்தை மொத்த ஆர்டரில் தற்போது 36 வி.வி.இ.ஆர். வகை அணு உலைகள் இடம் பெற்றுள்ளன. உலகின் 12 வெவ்வேறு நாடுகளின் சந்தைகளில் அவை பல்வேறு கட்ட அமலாக்கத்தில் உள்ளன.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image