தூத்துக்குடியில் பி.சுசீலா 85வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி முதியோர் இல்லத்திற்கு உதவி

தூத்துக்குடியில் பி.சுசீலா 85வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி முதியோர் இல்லத்திற்கு உதவி
         பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா அவர்களின் 85வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திரைப்பட கலைஞர்களின் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி தூத்துக்குடி அபிநயா மஹாலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்தது. இந்நிகழ்ச்சியில், பி.சுசீலா பாடிய டூயட் மற்றும் தனிப் பாடல்கள் மட்டும் இடம் பெற்றன.
         முத்துநகர் அலெக்ஸ் கைலாஷ் இசைக்குழு சார்பில், முதியோர் இல்ல வளர்ச்சி நிதிக்காக திரைப்பட இசையமைப்பாளர் எல்.ஆர்.எஸ்.சரவணன் மற்றும் திரை இசைக் கலைஞர்கள் பங்கேற்ற இந்த இசை நிகழ்ச்சியில் திரைப்பட பாடகி சிந்து, நெல்லையை சேர்ந்த பிரபல மருத்துவர் பிரேமசந்திரன் மற்றும் புகழ்பெற்ற பாடகர், பாடகிகள் பாடி அசத்தினர்.
          இந்நிகழ்ச்சிக்கு பி.சுசீலா அவர்களின் குடும்ப நண்பரும், தூத்துக்குடி மாவட்ட இந்து அறநிலையத்துறை கோவில்களின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் வீ.ரவீந்திரன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட இசை மகாராணி டாக்டர் பி.சுசீலா பாடல் ரசிகர் பேரவை தலைவரும், காந்திய சேவா மன்ற நிறுவனருமான என்.வி.ராஜேந்திரபூபதி சிறப்புரை ஆற்றினார்.
          அலெக்ஸ் கைலாசம் அறக்கட்டளை நடத்தி வரும் முதியோர் இல்லத்துக்கு, பெட் மற்றும் வீல் சேர் ஆகியவற்றை ஹோட்டல் சுகம் உரிமையாளர் இனிகோ வழங்கினார். மேலும் ஒரு வீல்சேரை மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சங்கரேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.
          இந்நிகழ்ச்சியில் ஏ.வி.எம். மருத்துவமனை மேலாளர் ரமேஷ், மக்கள் நீதி மய்யம் பகுதி செயலாளர் ஜவஹர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பிரபல தொழில் அதிபர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உள்பட ஏராளமான ரசிகர்கள் பங்கேற்றனர்.
           நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அலெக்ஸ் கைலாசம் அறக்கட்டளை நிறுவனர் எம்.வின்சென்ட், கே.பிரபாகரன், வார்டன் எஸ் ஆலிஸ், சட்ட ஆலோசகர் டாக்டர் பிரீடா ராயன் ஆகியோர் செய்திருந்தனர்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image