சேலத்தில் 66வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா

சேலத்தில் 66வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு,
சேகோசர்வ் சார்பில் நடைபெற்ற மரவள்ளி கிழங்கு விவசாயிகளின் கருத்தரங்கு கூட்டம் சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி
தலைமையிலும், மேலாண்மை இயக்குநர் சதீஷ் முன்னிலையிலும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகள்
கலந்துகொண்டனர்.
மேலாண்மை இயக்குநர் துவக்க உரையில் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்று இக்கருத்தரங்கின் நோக்கம் மற்றும் சேகோசர்வ் சங்கத்தின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். 
மேலும் மரவள்ளி கிழங்கிலிருந்து
ஜவ்வரிசியை தவிர மக்கள் நுகர்வதற்கு வேறு என்ன பொருட்களை தயார் செய்யலாம் என்பது பற்றியும் மற்றும் இதர மாநிலங்களில் சேகோ விற்பனையை அதிகரிக்கவும் மற்றும் மரவள்ளி
விவசாயிகளின் மூலம் கிழங்கு பற்றி விவசாயிகளின் கருத்துகளையும்
இக்கருத்தரங்கின் மூலம் பரிமாறிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர் சேகோசர்வ் தலைவர் தமிழ்மணி உரையாற்றும் போது, சேகோசர்வ் என்பது சேகோ மற்றும் ஸ்டார்ச்சினை விற்பனை செய்யும் ஒரு மார்க்கெட்டிங் சொசைட்டி
ஆகும். தற்போது 21 மாவட்டங்களில் மரவள்ளி பயிரிடப்படுவதாகவும்,
ஆனால் 9 மாவட்டங்களில்தான் சேகோ மற்றும் ஸ்டார்ச் தயாரிக்கும் ஆலைகள் உள்ளதாக தெரிவித்தார்
இத்தொழிலில் கலப்படம் எள் அளவும் இருக்கக்கூடாது என்பதற்காக எல்லா ஆலைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி, அதனை அந்தந்த தாலுக்கா சங்கங்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் ஆலைகளின் செயல்பாட்டை
சேகோசர்வ் மூலமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மரவள்ளி விலை குறையக்கூடாது என்பதற்காக சென்ற ஆய்வு கூட்டத்தில்
உற்பத்தியாளர்களுடன் பேசி கிழங்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை  மேற்கொள்ளப்படவில்லையெனில், கிழங்கின் விலை மேலும் குறைந்திருக்கும். ஜவ்வரிசி எவ்வளவு உற்பத்தி  செய்யப்பட்டாலும் அழிவதில்லை எனவே ஜவ்வரிசி உற்பத்தியை குறைக்கும் பொருட்டும், விவசாயிகளை காப்பாற்றும் பொருட்டும் பல்வேறு நடவடிக்கைகள்
சேகோசர்வ் சங்க மூலமாக மேற்கொள்ளப்பட்டு, ஜவ்வரிசிக்கு நல்ல விலை ரூ.6400 - வரை கிடைத்தது. இதனால் விவசாயிகளுக்கும் கிழங்கிற்கு நல்ல விலை கிடைக்கப்பட்டுள்ளது.
மேலும் மரவள்ளி கிழங்கு விவசாயிகளுக்கு நல்ல விலை கொடுக்க தேவையான நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு நல்ல விலை
கிடைக்க வேண்டும் என்பதில் சேகோசர்வ் உறுதியாக உள்ளது.
 இறக்குமதி ஸ்டார்ச் தொடர்பாக பேரவை கூட்டத்தின் மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேகோசர்வ் மத்திய மாநில அரசுகளுக்கு வைக்கும்
கோரிக்கைக்கு விவசாயிகளும் போதிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இடைத்தரகர்கள் இன்றி மரவள்ளி கிழங்கினை சேகோசர்வ் மூலமாக நேரடியாக கூடியவிரைவில் கொள்முதல் செய்து (10-20 நாட்களில்)  விவசாயிகளுக்கு பணம் வழங்க
ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மரவள்ளியின் விலை நிர்ணயம் செய்ய, மரவள்ளி சாகுபடி பற்றிய புள்ளி விவரங்கள் கிடைக்காததால் மரவள்ளியின் விலை மற்றும் இதனை பற்றிய தகவல்கள் சரியாக அறிய முடியவில்லை. புதிய தொழிற்கநுட்பத்தை பயன்படுத்தி செல்போன் மூலம் பதிவு செய்தால்
மரவள்ளி கிழங்கு பயிரிடப்படும் முழு விவரங்களும் தெரிவிக்கப்படும். மேலும் விவசாயிகள் அவர்களின் குறைகளை தெரிவித்தால் அதை மூன்று மாத கால அளவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் சங்க பணியாளர்கள் நேரடியாக மரவள்ளி
விவசாயிகளை தொடர்பு கொண்டு வேண்டிய உதவிகளை செய்யவும் ஏற்பாடு செய்யப்படும்.
இனிவரும் காலங்களில் அனைத்து மாவட்டத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சங்க பெருந்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்களும் கலந்து
கொள்வார்கள். மேலும் சங்கத்தின் சார்பாக விவசாயிகளுடன் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
ஒவ்வொரு தாலுக்காவிலும் சேகோசர்வ் சார்பாக பாயின்ட் மெஷின் வழங்க ஏற்பாடு
செய்யப்படும். சேகோசர்வ் சார்பாக கிளை அலுவலகங்கள் அமைக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. நானும் விவசாயி என்பதால் விவசாயிகளின் கஷ்ட, நஷ்டங்கள்
எனக்கும் தெரியும். விவசாயிகளுக்கு உரிய இலாபகரமான விலை கிடைக்க தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இதுபோன்று நடவடிக்கை எடுத்ததால் ஜவ்வரிசிக்கும், மரவள்ளி கிழங்கிற்கும் நல்ல விலையும் கிடைக்கிறது.
இத்தொழிலில் கலப்படம் முற்றிலுமாக
ஒழிக்கப்படும். ஜவ்வரிசி தமிழ்நாட்டிற்கு சொந்தமானது என்பதால் சேகோவிற்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
எதிர்காலத்தில் காப்பீடு திட்டங்கள் அறிமுகப்படுத்த ஆவன செய்யப்படும். மேலும் மாவட்டம் தோறும் உணவு திருவிழா நடத்துவதற்கும் ஆலைகளின் சோலார் சிஸ்டம் மானியத்துடன் நிறுவ உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். முடிவில் மேலாளர் (கணக்கு) ரவிக்குமார் நன்றியுரையாற்றினார்.


Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image