அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ., தலைமையில் தூத்துக்கடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடந்தது தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள மாவட்டக் கழக அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் அருணச்சலம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட கழக பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசியதாவது: தெற்கு மாவட்டம், வடக்கு மாவட்டம் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. திமுக ஜெயிக்க வேண்டும். அதற்கு ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுப்போம். கூட்டணி கட்சிகளை மதித்து நடப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- வருகிற உள்ளாட்சி தேர்தலில் அக்கறையுடன் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்; மக்களின் குடிநீர் தேவைக்கும், பள்ளிகளின் மேம்பாட்டுக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்த மக்களவை உறுப்பினர் கனிமொழிக்கு நன்றி தெரிவிப்பது; திருச்செந்தூர் - வள்ளியூர் நெடுஞ்சாலையை உடனே புதுப்பிக்க வேண்டும்; உர தட்டுப்பாட்டை போக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது