சேலம்
சேகோசர்வ் பேரவைக் கூட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு
பங்கு ஈவு தொகையாக ரூபாய் 3.90 கோடி வழங்க தீர்மானம்

சேகோசர்வ் பேரவைக் கூட்டம் சேலம் ரேடிசன் ஹோட்டலில் நடைபெற்றது.
நடைபெற்ற சேகோசர்வ் 30 வது பேரவை கூட்டத்திற்கு சங்க பெருந்தலைவர் தமிழ்மணி தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார். சேகோசர்வ் மேலாண்மை இயக்குனர் சதீஷ் ஐ.எஃப்.எஸ் முன்னிலை வகித்தார்.
இப் பேரவை கூட்டத்தில் சேகோசர்வ் புதிய மின்னணு ஏல மையத்தை திறந்துவைத்த தற்கும், ஜவ்வரிசியை தமிழகத்திலுள்ள அனைத்து கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்காடிகளில் 100 கிராம் பாக்கெட்களில் நியாயமான விலையில் விற்பதற்கு அனுமதி அளித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சங்க உறுப்பினர்களுக்கு 14% சதவீதம் பங்கு ஈவு தொகை அறிவிக்கப்பட்டது. அதன்பின், சங்க உறுப்பினர்களுக்கு பங்கு ஈவு தொகையாக ரூபாய் 3.90 கோடி வழங்க தீர்மானிக்கப்பட்டது.
சங்கம் துவங்கிய ஆண்டிலிருந்து மிகவும் அதிகபட்ச விற்பனையாக ரூபாய் 504/ கோடி 2018-19 ஆண்டில் நடைபெற்று உள்ளது. நடப்பாண்டில் விற்பனை மதிப்பு ஆயிரம் கோடியை எட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. எந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உற்பத்தியாளர்களுக்கும், மரவள்ளி பயிரிடும் மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கும் மிகவும் நல்ல விலை கிடைத்து வருகின்றது.
சேகோ உற்பத்திகள் அனைத்தும், சேகொசர்வ் இலுள்ள அதிநவீன NABL அங்கீகாரம் பெற்ற சேகோ ஆய்வகத்தில் 11 தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரமான ஜவ்வரிசி மட்டுமே விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றது. ஜவ்வரிசி புரதசத்து அதிகமுள்ள சத்தான உணவுப்பொருள் என்பதால் தமிழக மக்கள் அனைவரும் ஜவ்வரிசியை உணவுப் பொருள்களில் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.
மதர் சேகோ ஜவ்வரிசி புரதசத்து அதிகமுள்ள எளிதில் ஜீரணிக்கக்கூடிய சத்தான உணவுப்பொருள் என்பதால் இந்த ஜவ்வரிசி இந்திய ராணுவத் துறை, ரயில்வே துறை , சிறைத்துறை, அரசுகல்லூரி விடுதிகள் போன்ற துறைகளிலும் மதர் சேகோ ஜவ்வரிசி விநியோகம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மரவள்ளி கிழங்கு பயிர் , சேகோ மற்றும் ஸ்டார்ச் தொழில் தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கும், மரவள்ளிக்கிழங்கு விவசாயிகளுக்கும், சேகோ உற்பத்தியாளர் களுக்கும் தொடர்ந்து நல்ல விலைவிலை கிடைக்கவும், விற்பனையை அதிகரிக்கவும் பல்வேறு தீர்மானங்கள் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இப் பேரவை கூட்டத்தில் சேகொசர்வ் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சேகோசர்வ் சங்கத்திற்கு தணிக்கை ஆண்டுகளில் மிக அதிக அளவில் மூட்டைகள் அனுப்பிய உறுப்பினர்கள், தரமான பொருட்களை உற்பத்தி செய்து அதிகபட்ச விலைகள் பெற்ற உறுப்பினர்கள்,அதிக அளவில் கொள்முதல் செய்த வியாபாரிகள், அனைத்து தாலுக்கா சங்கங்களில் நிர்வாகிகள், அனைத்து உறுப்பினர்கள், சங்கப் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் அவர்களது சிறப்பான செயல்பாட்டிற்காக சங்கபெருந்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அவர்களால் பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மிகவும் நலிந்த நிலையில் அழிவுப் பாதையில் சென்றுகொண்டிருந்த சேகோ தொழிலை , சேகோசர்வ் பெருந்தலைவர் N. தமிழ்மணி அவர்களது புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதற்குப் பிறகு, இந்த தொழில் முன்பு எப்போதும் இல்லாத அளவில், மேம்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் சுவித்ரா, மேலாளர் நிர்வாகம், வரவேற்புரை உரையாற்றினார். ரவிக்குமார் மேலாளர் கணக்கு , ஓராண்டு சாதனைகளை எடுத்துரைத்தார். செண்பக ராஜா, மேலாளர் வியாபாரம் ©நன்றியுரை ஆற்றினார்