மத்திய அரசை கண்டித்து, தூத்துக்குடியில் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்



மத்திய அரசை கண்டித்து, தூத்துக்குடியில் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

 

      தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து, தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். செயல் தலைவர்கள் வசந்தகுமார் எம்.பி, மயூரா எஸ்.ஜெயக்குமார், தமிழக இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான சஞ்சய்தத், முன்னாள் மத்திய அமைச்சர் தனு‌‌ஷ்கோடி ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோ‌‌ஷம் எழுப்பினர்.

      ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் பேசும் போது, மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் இந்திய பொருளாதாரம் பின்தங்கி உள்ளது. இந்தியாவில் ஏழை எளிய மக்களின் வருமானம் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் பெருமுதலாளிகள், பா.ஜனதா கட்சியினரின் வருமானம் உயர்ந்து வருகிறது. அமித்‌ஷாவின் மகன் வருமானம் 2 ஆண்டுகளில் 15 சதவீதம் அதிகரித்து உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டதால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது என்று கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம், தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்முரளிதரன், மாவட்ட தலைவர்கள் ஸ்ரீராம் (தெற்கு), சீனிவாசன் (வடக்கு) முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டேனியல்ராஜ், வேல்துரை, சுடலையாண்டி, வர்த்தக பிரிவு தலைவர் டேவிட் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




Popular posts
சென்னை வியாசர்பாடி கல்லூரியில் சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைந்த 25 நபர்களை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் மலர்கொத்து, மருந்து மாத்திரைகள் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பி வைத்தார்
Image
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் 2கோடியே 75லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Image
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா வில் புதியதாக நீதிமன்ற வளாகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா
Image
மேதகு APJ அப்துல் கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
திருச்சுழி யூனியனில் ஒன்றிய குழுக் கூட்டம் ம.ரெட்டியபட்டியில் உள்ள யூனியன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழுத் தலைவர் பொன்னுத்தம்பி தலைமை வகித்தார்,
Image