உலக தொல்லியல் நாள் கொண்டாட்டம்..!
முதுகுளத்தூர் : அக்20
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக தொல்லியல் நாள் விழா கொண்டாடப்பட்டது.
தமிழகத்தில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னங்களான தஞ்சை பெருவுடையார் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில்,மாமல்லபுரம் சிற்பங்கள், நீலகிரி மலை ரயில், மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் ஆகியவற்றின் படங்களும், நூறு ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட செம்பு மற்றும் கும்பா ஆகியவைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. அவைகளை மாணவர்கள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
பாரம்பரியச் சின்னங்கள் பற்றி தலைமையாசிரியர் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் அவர்களும், நாணயங்கள் மற்றும் பழம் பொருட்கள் சேகரிப்பு பற்றி ஆசிரியர் பொ.அய்யப்பன் அவர்களும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.
மாணவர்கள் பழமையைப் பாதுகாக்கவும், தொல்லியல் ஆர்வம் கொள்ளவும் இவ்விழா ஆர்வமூட்டும் என்பதில் ஐயமில்லை.