சேலம் அழகாபுரம் கிளை நூலகத்தில், சர்வதேச மனித உரிமைகள் சமூக நீதி சபை, தமிழக அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை, அழகாபுரம் கிளை நூலகம் இணைந்து டெங்கு விழிப்புணர்வு முகாம் நடத்தியது.
இந்த முகாமில் கிளை நூலகம் வாசகர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு பற்றி எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் சர்வதேச மனித உரிமைகள் சமூகநீதி சபையின் சேலம் மாவட்ட தலைவி சர்மிளா சரவணன், மேற்கு மாவட்ட தலைவர் எழிலரசு, சேலம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர். செல்வமூர்த்தி,
டாக்டர். சசிக்குமார், பணி ஓய்வு டிஎஸ்பி முத்துமாணிக்கம், நூலகர் சம்பத் மற்றும் செயலாளர்கள், துணை தலைவர்கள் கலந்து கொண்டனர்.