சென்னையை அடித்தளமாக கொண்டு இயங்கி வருகின்ற லாபநோக்கற்ற சேவை நிறுவனமான ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷன் , அதன் முதலாவது வருடாந்திர நிதி திரட்டல் நிகழ்வை மைத்ரி என்ற பெயரிலான தங்களது அமைப்பின் வழியாக மிகச்சிறப்பாக நடத்தியது.
மூத்த குடிமக்களுக்கான ஆதரவுக் கரமாக செயல்படும் மைத்ரி முதியவர்கள் வாழ்க்கையை நடத்துவதில் எதிர்கொள்கின்ற கடும் சிரமங்களையும் , சவால்களையும் எளிதாக்குவதற்காக தொடங்கப்பட்டதாகும் . சென்னையிலுள்ள மியூசிக் அகாடமி வளாகத்தில் சங்கீத கலாநிதி அருணா சாய்ராமின் அற்புதமான இசைக்கச்சேரியின் வழியாக இந்த மாலை நேர நிகழ்வானது , உயிரோட்டமுள்ளதாக மாறியது . சேவையாற்ற வேண்டுமென்ற ஒரே பொறுப்புறுதியைக் கொண்டிருக்கும் மைத்ரி . வயது முதிர்ந்த நபர்களுக்கான ஆதரவு மற்றும் நிதிக்காக பொதுமக்களின் விழிப்புணர்வைச் சார்ந்து செயலாற்றி வருகிறது .
வசதியற்ற , வயது முதிர்ந்த நபர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதிலும் , அவர்களின் மனக்காயங்களை குணமாக்குவதிலும் மிகச்சிறப்பான பணியை நான்கு ஆண்டுகள் செய்ததற்குப் பிறகு , 2020 ஆம் ஆண்டுக்குள் 1 , 00 , 000 (ஒரு இலட்சம் ) ஆதரவற்ற முதியோர்களை அக்கறையுடன் கவனித்து அவர்களுக்கு சேவை வழங்க ஃபிரண்ட் என்டர்ஸ் ஃபவுண்டேஷன் உறுதி பூண்டிருக்கிறது .