இந்து முன்னணி உடைய நிறுவனத் தலைவர் ராமகோபாலன் ஜி யின் 93 வது பிறந்தநாள் விழா
ஆண்டிபட்டி அக். 20
ஆண்டிபட்டியில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் அதனுடைய நிறுவனத் தலைவர் ராமகோபாலன் ஜி அவர்களின் 93 ஆவது பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது .விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டியில் உள்ள அருள்மிகு காளியம்மன் கோவிலில் மாவட்ட செயலாளர் டாக்டர் .எஸ். பி .எம். செல்வம் தலைமையில் பொங்கல் வைத்து ராமகோபாலன் ஜி பெயரில் அர்ச்சனை அபிஷேகம் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது .பின்னர் பொதுமக்களுக்கு பொங்கல் பிரசாதமும், இனிப்புகளும் வழங்கப்பட்டது .விழாவில் மாவட்ட செயற்குழு மொக்கராஜ், ஒன்றிய செயலாளர் முனீஸ்வரர், துணை செயலாளர் பாண்டியராஜன், நகர அமைப்பாளர் கருப்பையா ,நகர துணை தலைவர் முருகேசன் ,ஒன்றிய துணைத் தலைவர் கண்ணன் மற்றும் சந்திர குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆண்டிபட்டியில் இந்து முன்னணி ராமகோபால ஜியின் 93 வது பிறந்தநாள் விழா